என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாக்குச்சாவடிகளில் நேரில் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகளில் நேரில் ஆய்வு
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பார்வையிடப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே தேர்தல் பணிகள் குறித்து பார்வையாளர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் கூடலூர் பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில் நடை பெற்று வந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பணிகள், தேர்தல் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சீபுரம் பகுதி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் பெரியசூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.
அங்கு அடிப்படை வசதிகள், மின்விளக்கு, குடிநீர், கழிப்பறை மற்றும் சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் நாளில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் தேர்தல் பார்வையாளர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சி, 11 பேரூராட்சி களுக்கு 19-ந்தேதி வாக்குப்பதிவும், 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.அதனடிப்படையில் ஓவேலி பேரூராட்சி மற்றும் நெல்லியாளம் நகராட்சிக் குட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் வாக்கு பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பார்வையிடப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப் பதற்கு ஏதுவான முறையில் வாக்குச்சாவடி மையங்களில் சாய்வு தளம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பதனையும் நேரில் பார்வையிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து, நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் நடுவட்டம் பேரூ ராட்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, கூடலூர் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் அப்துல் ஹாரிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






