என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான தங்கவேல்.
பள்ளி மேலாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பள்ளி மேலாளரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த தின்னபெல்லூர் அருகே புதூர் சோழ பாடி பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவர் தனியார் பள்ளியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் இவருக்கும் ஒகேனக்கல் ஊட்ட மலை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் நண்பருடன் செல்லும்போது சின்னப்பநல்லூர் சாலை அருகே வழிமறித்து செந் தமிழ் செல்வன¤டம் தங்கவேல் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.
இந்த சம்பவம் பற்றி ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை கைது செய்தனர். மேலும் ஒகேனக் கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும் தங்கவேல், மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் கூறப் படுகிறது.
கைதான தங்கவேல் மீது பென்னாகரம், ஏரியூர், ஒகேனக்கல் போலீஸ் ந¤லையங்களில் ஏற்கனவே 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






