என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சி கமிஷனரிடம் அ.தி.-மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மனு அளித்த காட்சி.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
வேலூர்.
வேலூர் மாநகர அ.தி.மு.க சார்பில் இன்று மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, பொருளாளர் மூர்த்தி, வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் ஜனனீ பி.சதீஷ் குமார், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் பாலச்சந்தர் மற்றும் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:-
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி தொகுதிக்குட்பட்ட காட்பாடி ஒன்றிய தேர்தலில் தேர்தல் பொறுப்பாளரான வட்டார வளர்ச்சி அதிகாரி ஆளும் தி.மு.க அரசுக்கு உதவிடும் நோக்கத்தோடு அ.தி.மு.க வேட்பாளரின் மனு பரிசீலனையின்போது வேண்டும் என்றே வாபஸ் மனுவில் கையெழுத்து பெற்று வீன் கழகம் ஏற்படுத்தி அ.தி.மு.க.வினர் மீது ஆளும் கட்சியினர் அழுத்தத்தோடு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் தற்போது நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவின்போதும், மனு பரிசீலனையின்போதும் ஆளும் தி.மு.க.வினர் அ.தி.மு.க. வேட்பாளரின் மனுவில் குளறுபடிகள் நடத்திட திட்டம் தீட்டியுள்ளனர்.
தங்களின் கீழ் பணிபுரியும் தேர்தல் நடத்தும் அலுவலர்களை தாங்கள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற பணிக்க வேண்டும்.
மேலும் நேற்று அண்ணா உருவ சிலைக்கு நாங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரான தங்களிடம் முறையான அனுமதி பெற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார் கார்த்திகேயன் ஆகியோர் எந்த ஒரு அனுமதியின்றி பூட்டியிருந்த இரும்பு கதவின் பூட்டு உடைத்து தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
எனவே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






