என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
நீலகிரி மாவட்டத்துக்கு தேர்தல் பார்வையாளர் நியமனம்
294 வார்டுகளில் 409 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது,
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள், 4 நகராட்சிகளில் உள்ள 108 வார்டுகளிலும் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 53,430 பெண் வாக்காளர்களும், 1 லட்சத்து 65,244 பெண் வாக்காளர்களும், இதர 7 வாக்காளர்களுமாக வாக்களிக்க உள்ளனர். மொத்தம் உள்ள 294 வார்டுகளில் 409 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அவற்றில் அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள வாக்குச் சாவடிகளில் 495 கட்டுப்பாட்டு கருவிகளும், 495 வாக்களிக்கும் எந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
மேலும் 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் துணை ஆட்சியர் நிலையில் தலா ஒருவர் வீதம் 15 உள்ளூர் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தலில் ஈடுபடு ம் 1980 அலுவலர்களுக்கும் 11 பயிற்சி மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களாக 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டரின் வளர்ச்சிப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டு 6 அலுவலர்கள் 24 மணி நேரம் பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்டு கவனித்து வருகின்றனர். அதேபோல, நீலகிரி மாவட்டத்துக்கு தேர்தல் பார்வையாளராக கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Next Story






