என் மலர்
உள்ளூர் செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அம்பேத்குமார் எம்.எல்.ஏ தொடங்கிவைத்து பேசிய போது எடுத்த படம்.
மோட்சவாடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
மோட்சவாடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் மோட்சவாடி கிராமத்தில் தர்மராஜா கோவில் மைதானத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
வந்தவாசி அம்பேத்கர் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அரசு நேரடி கொள்முதல் நிலைய ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நெல் சுத்தம் செய்யும் எந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார் மேலும் 2 ஊராட்சிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் நடைபெறும் திட்டப் பணிகளுக்கான ஆணைகளை வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
விழாவில் பெரணமல்லூர் நகர தி.மு.க. செயலாளர் வேணி ஏழுமலை, பி.என்.அண்ணாதுரை மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மோட்சவாடி ஊராட்சி தி.மு.க. கிளை கழக செயலாளர் கண்ணையன் நன்றி கூறினார்.
Next Story






