search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஓசியில் பெட்ரோல் தர மறுத்ததால் ஊழியர்கள் மீது தாக்குதல்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஓசியில் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள உளியாளம் கிராமத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, தளி பகுதியை சேர்ந்த பாபு என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, பாகலூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி, மல்லிகார்ஜூன் என்ற 2 பேர்,  ஒரு மோட்டார் சைக்கிளில்  பெட்ரோல் நிலையத் திற்கு சென்றனர். அப்போது, அவர்கள் இருவரும்  குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் இருவரும், அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் தங்களது மோட்டார் சைக்கிளுக்கு, ஓசியில் பெட்ரோல் நிரப்பும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஊழியர் மறுக்க வே போதை நபர்கள் இருவரும், அந்த ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் தகராறு முற்றியதால், பெட்ரோல் நிலையத்தின் மேலாளர் பாபு, பிரச்சினையில் தலையிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில்,  போதையில் இருந்த அந்த 2 நபர்களும்,பாபுவை ஜன்னல் வழியாக இழுத்து தாக்கியதுடன், அவரது கையையும் கத்தியால் குத்தி காயப்படுத்தினர். அப்போது அவரை காப்பாற்ற சென்ற பெட்ரோல் நிலைய ஊழியர் யாரப் (46)  என்பவரையும் போதை நபர்கள்  தாக்கினர். இந்த காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகின.

    காயமடைந்த பாபு மற்றும் யாரப் ஆகிய இருவரும் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிபோதையில் பெட்ரோல் நிலைய மேலாளர் மற்றும் ஊழியர் ஆகியோரை தாக்கிய போதை நபர்கள் இருவரையும் பாகலூர் போலீசார் விசாரித்து, கடுமையாக எச்சரித்து அனுப்பினர். 

    பெட்ரோல் நிலைய மேலாளர் மற்றும் ஊழியரை போதை நபர்கள் தாக்கும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×