என் மலர்
உள்ளூர் செய்திகள்

தியாகதுருகத்தில் 7-ந் தேதி வாகனங்கள் பொது ஏலம்
தியாகதுருகத்தில் 7-ந் தேதி வாகனங்கள் பொது ஏலம்
தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வருகின்ற 7-ந் தேதி காலை 9 மணியளவில் தியாக துருகம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் தமிழ்நாடு மது விலக்கு சட்டம் 14(4)-ன் படி இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவைகளை தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வருகின்ற 7-ந் தேதி காலை 9 மணியளவில் தியாக துருகம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. எனவே வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100 நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.
ஏலத்தொகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற் குண்டான ரசீது அந்த வாகனத் தின் உரிமை ஆவணம் ஆகும். மேலும் விபரங் களுக்கு கூடுதல் காவல் கண்காணிப் பாளர், தலைமையிடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் அவர்களது அலுவலகத் திலோ அல்லது நேரடியாக வோ, தொலை பேசி மூல மாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






