என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர் அமைக்கும் பணிக்காக பந்தக்கால் நாட்டினார்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தேர் அலங்கரிக்கும் பணிக்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
இந்த ஆண்டு மாசி மக பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா 28 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். வரும் 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
அந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தேர் அலங்கரிக்கும் பணிக்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
வேத சிவாச் சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், உபயதாரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






