என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பார்வையிடும் நேரம் அதிகரிப்பு: நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா தளங்களுக்கான பார்வையிடும் நேரம் அதிகரிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 8&ந் தேதி முதல் சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட சுற்றுலா தலங்களில் மாலை 3 மணிக்கு மேல் நுழைவு டிக்கெட் வழங்கப்படவில்லை. அதற்கு முன் பெற்று உள்ளே சென்றவர்கள் சுற்றி பார்த்து விட்டு வெளியே வர கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
இதனால் பலர் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைய தொடங்கியது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் அதனை நம்பி தொழில் செய்து வந்த தொழிலாளர்களும் மிகவும் பாதிப்படைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் பார்வை நேர கட்டுப்பாட்டில் தளர்வு அளிக்கப்பட்டது. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பார் வை யிடும் நேரம் அதிகரிக்கப் பட்ட தகவல் அறிந்ததும் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உள்ப்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் குடும்பம், குடும்பமாக வந்து பூங்காக்களில் உள்ள மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். நாட்கள் செல்ல, செல்ல சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Next Story






