என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம்
    X
    பணம்

    காஞ்சிபுரம் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.7 லட்சம் பறிமுதல்

    காஞ்சிபுரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.7 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை பகுதியில் இன்று காலை வேளாண்மைத் துறை உதவி அலுவலர் தேவசேனாபதி தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதால் பணத்தை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் மாநகராட்சி கமி‌ஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நாராயணனிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×