என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் திருட்டு
    X
    பெண்ணிடம் திருட்டு

    ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

    காரியாபட்டி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்


    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முஷ்டக்குறிச்சியை சேர்ந்தவர் ராசாத்தி (வயது 32). இவர் சம்பவத்தன்று வங்கியில் வைத்திருந்த தனது நகைகளை திருப்பினார். பின்னர் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார்.
     
    கூட்டம் அதிகமாக இருந்ததால் ராசாத்தி நின்றுகொண்டே பயணித்ததாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர் ராசாத்தி பையில் இருந்த 2 பவுன் நகை, ரூ. 4,500 ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினார்.

    காரியாபட்டி அய்யப்பன் கோவில் அருகே பஸ் வந்தபோது பையை பார்த்த ராசாத்தி நகை, பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் கைவரிசை காட்டிய நபரை தேடி வருகின்றனர். 
    Next Story
    ×