என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கூடலூரில் பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய வாலிபர் கைது

    சமூக வலைத்தளம் மூலம் பழகி பெண்ணை மிரட்டிய வாலிபர் சிக்கினார்.
    ஊட்டி:

    விழுப்புரம் மணம் பூண்டியை சேர்ந்த மனோகர் (வயது 25). இவருக்கு சமூக வலைதளம் மூலம்  நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வசிக்கும் திருமணமான 30 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த பெண்  அவருடன்   நட்பாக பழகி வந்தார். அப்போது மனோகர் அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்  அவருக்கு அறிவுரை கூறி விலகி சென்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் அந்த பெண்ணின் படத்தை  ஆபாசமாக  மார்பிங் செய்து அவருக்கு அனுப்பினார். பின்னர் அந்த படத்தை பேஸ்புக்கில்  வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து கூடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார்  வழக்கு பதிவு செய்து  இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையில் தனிப்படை போலீ சார்  விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர் தனிப் படை போலீசார் விழுப்புரம் மணம்பூண்டிக்கு விரைந்து சென்று மனோகரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது,

    கூடலூர் பெண் கொடுத்த புகாரின் பேரில் மனோகரை   கைது செய்தோம். அப்போது அவரின் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தோம்.  அதில் இது போன்று பல பெண்களின் படங்களை மார்பிங் செய்து அவர் மிரட்டி வந்தது தெரியவந்தது என்றனர்.
    Next Story
    ×