என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் பயிற்சி வகுப்பினை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சி வகுப்பு
திருவண்ணாமலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்பினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 நகராட்சி மற்றும் 10 பேரூரா ட்சிகளில் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் 1,647 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் நேற்று முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
இதில் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறைகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அலுவலர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பாக தொடர்பாக அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், உதவி கலெக்டர் வெற்றிவேல், மாவட்ட தகவலியல் அலுவலர் சிசில் இளங்கோ, மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story






