என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் பறிமுதல்
வாகன சோதனையில் பணத்துடன் சிக்கிய நெல் வியாபாரி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த வாகன சோதனையில் நெல் வியாபாரி 76 ஆயிரம் ரூபாயுடன் சிக்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலும் இரவு-பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆவணம் இல்லாமல் நெல் வியாபாரி கொண்டு வந்த ரூ. 76 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய் துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். நெல் வியாபாரியான இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
வ.புதுப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது பாலகிருஷ்ணனை பறக்கும் படையினர் மறித்து சோதனையிட்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையில் சிறப்பு காவல் ஆய்வாளர் பாண்டியம்மாள் மற்றும் போலீசார் சோதனை நடத்தியபோது பாலகிருஷ்ணனிடம் ரூ. 76 ஆயிரத்து 300 இருந்தது.
ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்¬ பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் பாலகிருஷ்ணனிடம் அறிவுறுத்தினர்.
Next Story






