search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பாலக்கோடு பகுதியில் வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி விலை சரிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பேளாரஹள்ளி, பெல்ரம் பட்டி, சின்னமிட்டஅள்ளி, மொளப்பனஅள்ளி, கோவிலூர், எலுமிச்சன அள்ளி, கேத்தனஅள்ளி, முக்குளம், கெட்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி பயிரிட்டு வருகின்றனர். 

    இங்கு உற்பத்தி செய்யப்படும் முள்ளங்கி கிருஷ்ணகிரி, சேலம், பெங்களூரு, ஓசூர் கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை ஆகிய ஊர்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமார் 100 டன் அளவுக்கு முள்ளங்கி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. 

    தற்போது தொடர்ந்து பருவமழை பொழிந்து வருவதால் 45நாட்களில் அருவடைக்கு வரும் முள்ளங்கியை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளதால் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து  கொள்முதல் கிலோ முள்ளங்கி 4 ரூபாய் முதல் 6 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் அடைவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் முள்ளங்கி ரூ.50-&க்கு மேல் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. எனவே உழவர் சந்தையில் தினதோறும் விலை நிர்ணயம் செய்வதுபோல் முள்ளங்கிக்கு மாவட்ட நிர்வாகம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×