என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிற்சி வகுப்பை கலெக்டர் தொடங்கி வைத்து பேசிய போது எடுத்த படம்.
பெரம்பலூரில் தேர்தல் அலுவலர்களுக்கு இன்று முதல் கட்டபயிற்சி வகுப்புகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவர்களுக்கு இன்று முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடை பெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு இன்று 31 ந்தேதி நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி இன்று நடைபெறுகிறது. முதல் கட்ட பயிற்சியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, நிலை 3, ஆகிய பணிகளுக்காக மொத்தம் 405 நபர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
பயிற்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் 3 பறக்கும் படைகளும், 4 பேரூராட்சி பகுதிகளுக்கு தலா 3 வீதம் மொத்தம் 12 பறக்கும் படைகள் என மொத்தம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் நகராட்சியில் 50 வாக்குச்சாவடிகளும் 4 பேரூராட்சிகளில் மொத்தம் 62 வாக்குச்சாவடிகள் என நமது மாவட்டத்தில் 112 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பெரம்பலூரில் 7 வாக்குச்சாவடிகளும், பூலாம்பாடி பேரூராட்சியில் 2 வாக்குச்சாவடிகளும், அரும்பாவூர் பேரூராட்சியில் 2 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 11 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுடன், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது, தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் பயிற்சி வழங்குவதுடன் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story