என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறைச்சி கழிவு
காட்டாங்கொளத்தூர் அருகே ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதாரகேடு
காட்டாங்கொளத்தூர் அருகே ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு:
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வ.உ.சி. நகரில் ஏரி உள்ளது. இங்கு இரவு நேரங்களில் இறைச்சி, மருந்து கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் ஏரிக்கரை முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
கோழி கழிவுகளின் மூட்டைகளை நாய்கள் வீதிகளில் இழுத்து போட்டு விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
ஏரியில் இருந்து கே.கே.நகர் மற்றும் வ.உ.சி. நகர் மற்றும் சக்கரவர்த்தி நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது.. எனவே ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






