என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புப்படம்
ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.4.47 லட்சம் சிக்கியது
By
மாலை மலர்31 Jan 2022 8:18 AM GMT (Updated: 31 Jan 2022 8:18 AM GMT)

ஈரோட்டில் இன்று காலை ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரி அருகே சேனாதிபதிபாளையம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளால் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வினியோகப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 66 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரம் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரி அருகே சேனாதிபதிபாளையம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.4.47 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வெள்ளோடு அடுத்த டி.மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னியாகவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 34) என தெரியவந்தது. இவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story
×