என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    காட்டுப்புத்தூர் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

    காட்டுப்புத்தூரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 2 பேர் சிக்கினர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம், தொட்டியம்  காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஆலம்பாளையம்புத்தூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 37).  இவர் சம்பவத்தன்று பீரோவை பூட்டி விட்டு, பீரோ சாவியை கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு தனது வீட்டின் அறையை உள்புறமாக தாப்பாள் போடாமல் தூங்கினார். காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.84 ஆயிரம் ரொக்கபணம் மற்றும் 1.1/5 பவுன் நகை மாயமாகி இருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகை பணத்தை திருடி சென்று விட்டதை அறிந்த சதீஷ்,  இது குறித்து காட்டுப் புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரை பெற்றுக் கொண்ட காட்டுப்புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.  விசாரணையில்  அதே ஊர் அதே தெருவை சேர்ந்த சொக்கலிங்கம் வயது 24 ஜெயச்சந்திரன் வயது 32 ஆகிய இருவரும் சதீஷ் வீட்டில் திருடியது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து ஜெயச்சந்திரனை கைது செய்து அவரிடமிருந்து ரூ15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். சொக்கலிங்கம் தலை மறைவானார்.  அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் கடந்த ஜூலை மாதம் உன்னியூரில் உள்ள கோவில் உண்டியலை உடை த்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து காட்டுப்புத்தூர்காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில்  கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது  ஆலம் பாளையம் புத்தூரைசேர்ந்த சொக்கலிங்கம் (வயது 24), மோகனூர் வட்டம் குமாரபாளையம் தண்ணீர் பந்தல் சேர்ந்த சிவகுமார் (வயது 34)  என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.  
    இந்த இரண்டு திருட்டு வழக்கிலும் சம்பந்தப்பட்டு தலை மறைவான  சொக்கலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×