search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    திருச்சி மாநகராட்சியில் கிடப்பில் போடப்பட்ட மலிவுவிலை குடிநீர் ஏ.டி.எம். மையங்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா? - எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

    திருச்சி மாநகராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மலிவுவிலை குடிநீர் ஏ.டி.எம். மையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலிவுவிலையில் மக்களுக்கு  சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க மெயின்கார்டு கேட், பீமநகர் பகுதிகளில் தானியங்கி குடிநீர் ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

    அதன்பின்னர் தேர்வு செய்யப்படும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்படும்.புதிய கவுன்சில் கூட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர் ஏ.டி.எம். மையங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
     
    பீமநகர் பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் கூறும்போது,
    திருச்சி மாநகராட்சி சார்பில் மக்களுக்கு காவிரி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இருப்பினும் பல மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆகவே குடிநீர் தானியங்கி மையங்களுக்கு மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு உள்ளது. விரைவில் நடைபெற இருக்கும் புதிய கவுன்சில் கூட்டத்தில் மேற்கண்ட திட்டத்திற்கு நல்ல  விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

    சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது குடிநீர் கேன்களின் விலை ரூ. 40-ஐ தொட்டுவிட்டது. பீமநகர் போன்ற பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தானியங்கி மையங்கள் வரப்பிரசாதமாக அமையும் என்றார். 
    Next Story
    ×