என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காரைக்காலில் கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை

    காரைக்காலில் கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் நூர்பள்ளிவீதி தீன்ஸ்பார்க்கில் வசிப்பவர் ஹாஜிராபானு(வயது28). இவரது கணவர் ஹாஜா நவாகதீன் வெளிநாட்டில்கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

    ஹாஜிராபானு, ஹாஜாநவாகதீன் தந்தை, தாயார், தம்பி உள்ளிட்ட உறவுகளுடன், ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

    வெளிநாட்டில் உள்ள ஹாஜாநவாகதீன், கடந்த 26ந் தேதி ஹாஜிராபானுவிற்கு போன் செய்துபேசியுள்ளார். அப்போது, ஏன் எனக்கு போன் செய்வதில்லையென கேட்டு திட்டினார். இதனால் மனம் உடைந்து போன ஹாஜிராபானு, வீட்டு அறைக்கு சென்று, தனதுதுப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.

    சத்தம் கேட்டு, வீட்டில் உள்ள உறவினர்கள் அறை கதவை உடைத்து, ஹாஜிராபானுவை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹாஜிராபானு, இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×