search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களை கட்டியது.
    X
    போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களை கட்டியது.

    போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குவிந்த வியாபாரிகள்

    முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று வியாபாரிகள் குவிந்தனர்.
    மத்தூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததால் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி வாரச்சந்தை ஞாயிறு தோறும் கூடுவது வழக்கம்.  தமிழகத்திலேயே பெரிய சந்தையாக போச்சம் பள்ளி சந்தை விளங்கி வருகிறது. இங்கு தக்காளி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படும் சந்தையாக இருந்து வருகிறது. 

    வாரச்சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள்,  விவசாயிகள் வந்து தங்களது பொருட் களை விற்கவும், வாங்கவும் வருகிறார்கள். இதனால் வாரச்சந்தையில் வியாபாரம் கோடிக் கணக்கில் நடை பெறும்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில வாரங் களுக்கு முன்பு ஞாயிற்றுக் கிழமை அன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் போச்சம்பள்ளி வாரச்சந்தை நடைபெறாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை  முழு ஊரடங்கு விலக்கி கொள்ளப் பட்டதால் போச்சம் பள்ளி வாரச்சந்தை மீண்டும் களை கட்டியது. இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் திரண்டு வந்தனர். வியாபாரமும் மும் முரமாக நடந்து வந்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முழு ஊரடங்கு விலக் கலுக்கு பிறகு இன்று நடந்த போச்சம்பள்ளி வாரச் சந்தையில் ஆடு, மாடுகள், காய்கறிகள், ஜவுளிக் கடை, ஓட்டல்கள், தேங்காய்  உள்ளிட்ட அனைத்து வியா பாரம் சூடுபிடிக்க தொடங் கியுள்ளது.
    Next Story
    ×