என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மத்தூரில் வட மாநில தொழிலாளி மாரடைப்பால் மரணம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வடமாநில தொழிலாளி மாரடைப்பால் மரணமடைந்தார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள தொகரப்பள்ளி பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் 60-க்கும் மேற்பட்ட  வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த தொழிற்சாலையில் ராஜஸ்தான் மாநிலம், கோர் கிராமத்தை சேர்ந்த பிம்ராவ்  (வயது40) என்பவரும் வேலை பார்த்து வந்தார். 

    இவர் நேற்றுமாலை  மட்டன், சிக்கன் வாங்கி வைத்து மது அருந்தி கொண்டி ருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை பார்த்த  அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×