என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உயர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 367 பேர் பலியாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனா பாதிப்புடன் கடந்த 25-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 22-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான வர்களின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 665 பேர் பாதிக்கப்பட்டனர். 586 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 56 ஆயிரத்து 128 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 49 ஆயிரத்து 593 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 6 ஆயிரத்து 168 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






