என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளவர்களிடம் நேர்காணல் இன்று நடந்தது.
பா.ஜ.க.வில் வேட்பாளர் தேர்வு தீவிரம்
வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் வேட்பாளர் தேர்வு இன்று நடந்தது.
வேலூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததை அடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிட உள்ளவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இன்று நேர்காணல் நடந்தது.
பா.ஜ.க மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் தசரதன், மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட பொது செயலாளர் எஸ் எல் பாபு ஆகியோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள பா.ஜ.கவினரிடம் நேர்காணல் நடத்தினார்.
அப்போது நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் மக்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு என்ன? கொரோனா காலகட்டத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியில் பொதுமக்களுக்கு சேவை செய்வீர்களா? தேர்தலில் போட்டியிட்டால் எவ்வளவு செலவு செய்வீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சிப் பிரிவு வெங்கடேசன், ஊடகப்பிரிவு ஆனந்தன் உட்பட திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
Next Story






