என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    X
    சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    வேலூர் மாநகர எல்லை பகுதிகளில் தீவிர சோதனை

    பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வேலூர் மாநகர எல்லை பகுதிகளில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் பென்னாத்தூர், திருவலம், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் ஆகிய பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

    ஆவணம் இன்றி பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சியில் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் நேற்று முதல் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மாநகராட்சி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டள்ளனர். 

    வேலூர் மாநகராட்சி எல்லை பகுதி, க்ரீன் சர்க்கிள், சாலை சந்திப்புகளில் இன்று பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
    ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணத்துடன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×