என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் பலி

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேன் மோதிய விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள மயிலம்பட்டியை சேர்ந்தவர்சதீஷ்குமார் (வயது 28). கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றிவந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில்  கடந்த 27ந் தேதி பணியை முடித்துக் கொண்டு தனது மோட்டார்சைக்கிளில் காவேரிப்பட்டணம், வேலம்பட்டி சாலையில் தளிஅள்ளிஅருகே தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது வேலம்பட்டியில்இருந்து வந்த வேன் அவர் மீது மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டுசிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு செல்லும் வழியில் அவர் இறந்தார். 

    இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×