
தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழலாளர் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று பெரம்பலூர், அரியலூர், முசிறி ஆகிய பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 60 நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 11 வணிக நிறுவனங்கள், 19 உணவு நிறுவனங்கள், 3 மோட்டர் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 33 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு சார்வு செய்து பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாது பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டு அந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.