என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் மேலும் 57 பேருக்கு கொரோனா
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் மேலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதி கரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் குன்னூர் வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ராணுவ உயர் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவ பயிற்சி கல்லூரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுமார் 600 பேருக்கு மாதிரிகள் சேகரித்து பரிசோதனை நடைபெற்றது. இதில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அங்குள்ள மற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர் களுக்கு பரிசோதனை மேற் கொள் ளப்பட்டது. இதில் கடந்த 3 நாட்க ளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தங்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story






