search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    முசிறி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அமோகம்

    மூன்று நாட்களில் முசிறி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 7 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூரில் பிரத்யேக பருத்தி ஒழுங்குமுறை விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. 

    இங்கு துறையூர், கோட்டாத்தூர், சிக்கத்தம்பூர், கரட்டாம்பட்டி, நல்லியம்பட்டி, கலிங்கமுடையான்பட்டி, ஆதனூர், காளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தி ஏலம் விடுகின்றனர். 

    வழக்கமாக ஆண்டுக்கு 3 பருவம் விற்பனை நடைபெறும். இப்போது டிசம்பர் முதல் மார்ச் வரையிலான பருத்தி பருவ விற்பனை நடந்து வருகிறது. நூல் விலையேற்றத்தால்  பருத்தியின் விலையும் சமீப காலமாக உயர்ந்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் நல்ல பலனை அடைந்து வருகின்றனர். கடந்த 2021&ல் மேற்கண்ட துறையூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 19,903 குவிண்டால் பருத்தி ரூ.11 கோடியே 447 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. 

    வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமைகளில் ஏலம் நடக்கிறது. நடப்பு மாதத்தில் 3 நாட்கள் நடந்த ஏலத்தில் மட்டும் ரூ.7 கோடியே 5 லட் சத்துக்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது 

    முதல் பருவத் தில் ரூ.2 கோடிக்கு மட்டுமே பருத்தி ஏலம் விடப்பட்டது. ஆனால் மூன்றாவது  பருவத்தில் விற்பனை சூடுபிடித்துள்ளதுள்ளதாக விற்பனை குழு செயலாளர்  சந்திரசேகர் தெரிவித்தார்.
    Next Story
    ×