என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியரசு தினவிழாவையொட்டி வேலூர் கோட்டை கொத்தளத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்.
    X
    குடியரசு தினவிழாவையொட்டி வேலூர் கோட்டை கொத்தளத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்.

    வேலூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

    வேலூரில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
    வேலூர்:

    குடியரசு தினத்தையொட்டி இன்று காலை வேலூர் கோட்டை கொத்தளத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

    தொடர்ந்து கோட்டை முன்பு உள்ள காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.

    அதன்பிறகு நேதாஜி மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 170 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    விழாவில் பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், உதவி கலெக்டர் விஷ்ணு பிரியா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கொரோனா காரணமாக விழா எளிதாக நிறைவு பெற்றது. இந்த விழாவில் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    Next Story
    ×