என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ விபத்து
மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்து ஏற்பட்ட வீட்டுக்குள் சிக்கிய 6 வயது சிறுவன் மீட்பு
தீவிபத்தில் தொழிலாளி வீட்டில் இருந்த பொருட்கள் நாசமானது.
கோவை:
மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை ஊராட்சிக் குட்பட்ட சம்பரவள்ளிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (65). இவ ரது மனைவி மகேஸ்வரி (53). விவசாய கூலித்தொழி லாளிகள். இவர்களது மகன் ஆனந்தராஜ் (28), மருமகள் மகேஸ்வரி (26), பேரன் ஸ்ரீ ஹரி (6), பூர்ணா ஸ்ரீ(4). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் வழக்கம் போல் முருகேசன், மகேஸ் வரி, ஆனந்தராஜ் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். மருமகள் மகேஸ்வரி தனது மகள் பூர்ணாஸ்ரீயுடன் அருகில் இருந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.
சிறுவன் ஸ்ரீ ஹரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். இந்நிலையில் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகையுடன் தீ மளமளவென்று பரவுவதை கண்ட மகேஸ்வரி சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் ஓடி வந்து தீ பிடித்த வீட்டிற்குள் இருந்து வெளியே வர முடியாமல் அழுது கொண்டிருந்த ஸ்ரீஹரியை மீட்டதுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதில் வீட்டில் இருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததுடன் பீரோவில் வைத்திருந்த ரூ.30 ஆயிரமும் தீக்கிரையானது தீ விபத்து குறித்து சிறுமுகை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






