search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவையில் சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்க 120 இடங்கள் தேர்வு

    மாநகராட்சிப் பகுதியில் சாலையோரக் கடைகள் நடத்த ஏற்ற இடத்தைத் தேர்வு செய்தும், அதற்கான திட்டங்களை வகுக்குமாறும் உத்தரவிட்டது.
    கோவை:

    சென்னை, கோவை, மதுரை, டெல்லி, மும்பை, உள்ளிட்ட தொழில் நகரங் களில் சாலையோர வியா பாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை ஒழுங்குப்படுத்தும் விதமாகவும், மத்திய அரசு கடந்த 2016&ம் ஆண்டு சாலையோர வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அந்தந்த மாநகராட்சிப் பகுதியில் சாலையோரக் கடைகள் நடத்த ஏற்ற இடத்தைத் தேர்வு செய்தும், அதற்கான திட்டங்களை வகுக்குமாறும் உத்தரவிட்டது.

    மத்திய அரசின் உத்தரவுப்படி கோவை மாநகராட்சியில் சாலையோர வியா பாரிகளின் எண்ணிக்கை மற்றும் மண்டலம் வாரியாக முக்கிய இடங்களில் கடை நடத்தும் சாலையோர வியாபாரிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சியில் கடந்த 2006&ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 7 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் இருந்தனர். ஆனால் தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். முறைப்படி கணக்கெடுப்பு நடத்தி சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக 5 மண்டலங் களிலும் செயற்பொறியாளர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. அதில் மாநகராட்சி அதிகாரி, சட்டப் பேரவை உறுப்பினர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள்.  

    இவர்கள் ஒவ்வொரு மண்டலத்திலும், எந்தந்த தெருக்களில் சாலையோர வியாபாரிகள் கடை நடத்த லாம், எந்தந்த தெருக்களில் வியாபாரிகள் சாலையோரக் கடை அமைக்கக் கூடாது என்பதை முடிவு செய்வார்கள்.அதன்படி சாலையோர வியாபாரிகள் கடை நடத்த இடங்கள் தேர்வு செய்யப்படும். கடை நடத்த அனுமதிக்கப்படும் இடங்களில் மாநகராட்சி சார்பாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். 

    மேலும் சுகாதாரத்தை பேணும் வகையில் அப்பகுதிகளில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தற்போது மாநகரில் சாலையோர வியாபாரிகள் கடை நடத்த 120 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு விரைவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×