search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவையில் விமான சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு

    கோவையில் இருந்து சரக்கு போக்குவரத்து ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், திருப்பதி, கோவா ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனியாக சரக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை. 

    இருந்தபோதிலும் கோவையில் இருந்து சரக்கு போக்குவரத்து ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. சரக்கு விமானத்துக்கு மாற்றாக பயணிகள் விமானத்திலேயே சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோதிலும் கோவை விமான நிலையத்தில் அதிக அளவில் சரக்குகள் கையாளப்பட்டது. கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில் 12 ஆயிரத்து 242 டன் சரக்குகள் கையாளப்பட்டன. இதில் உள்நாட்டில் 8,503 டன்னும், வெளிநாடுகளுக்கு 3,739 டன்னும், 2018&-19&ம் நிதி ஆண்டில் 15,307 டன் சரக்குகள் அனுப்பப்பட்டன. 

    இதில் உள்நாட்டில் 10,290 டன்னும், வெளிநாடுகளுக்கு 5,017 டன்னும் கையாளப்பட்டன. 2019-20-ம் நிதி ஆண்டில் 13,430 டன்னில் உள்நாட்டில் 9,708 டன்னும், வெளிநாடுகளுக்கு 3,722 டன்னும், 2020-21-ம் நிதி ஆண்டில் கையாளப்பட்ட 6,560 டன்னில் உள்நாட்டில் 5,431 டன்னும், வெளிநாடு களுக்கு 1,129 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை 5,886 டன் சரக்குகள் கையாளப்பட்டன. இதில் உள்நாட்டில் 4,922 டன்னும், வெளிநாடுகளுக்கு 964 டன் சரக்குகள் அனுப்பப்பட்டது.
    Next Story
    ×