search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கார் பார்க்கிங் கொரோனா வார்டாக மாற்றம்

    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கார் பார்க்கிங் கொரோனா வார்டாக மாற்றப்பட்டது.
    கோவை:

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் மற்றும் 2&வது அலையின்போது போதிய படுக்கை வசதியில்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. 

    ஆக்சிஜன் படுக்கைகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தன. தற்போது இந்த பிரச்சினைகளை சரி செய்யும் வகையில் கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

    இந்த நிலையில் ஆஸ்பத்திரி வளாகத்தின் கலையரங்கத்தின் கீழ் பகுதியில் 20 ஆயிரம் சதுரடி கொண்ட கார் பார்க்கிங் உள்ளது. அந்த பகுதியில் 250 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ரவிக்குமார் கூறும்போது:-

    ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கார் பார்க்கிங் பயனில்லாமல் இருந்தது. அந்த இடத்தை கொரோனா வார்டாக மாற்ற அனுமதி கோரப்பட்டது. உயரதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதியளித்தனர். 20 ஆயிரம் சதுரடி கொண்ட வாகன பார்க்கிங் இடத்தை 3 நாட்களில் 250 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டாக மாற்றி இருக்கிறோம்.

    இங்கு 50 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி உள்ளது. தேவைப்பட்டால் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தலாம். அதற்கான வசதி செய்யப் பட்டுள்ளது. கலையரங்கத்தின் உள்பகுதியிலும் படுக்கைகள் போடலாம். நவீன மருத்துவ வசதிகளுடன் இந்த வார்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
    Next Story
    ×