என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாதனை சிறுமி தாரகை ஆராதனா
    X
    சாதனை சிறுமி தாரகை ஆராதனா

    கோவளம்-நீலாங்கரை இடையே கடலில் 19 கி.மீட்டர் தூரத்தை நீந்தி 8 வயது சிறுமி சாதனை

    சிறுமி தாரகை ஆராதனா கோவளத்தில் இருந்து நீலாங்கரை வரை 19 கி.மீ. தூரத்தை கடலில் நீந்தினார். இதனை அவர் 6 மணி நேரம் 14 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார்.

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரையை சேர்ந்தவர் அரவிந்த். ஆழ்கடல் பயிற்சியாளர். இவர் கடல் வளத்தை பாதுகாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

    ஆழ்கடலில் திருமணம் நடத்தியது, சைக்கிள் ஓட்டியது, உடற்பயிற்சி, யோகா, கிரிக்கெட் விளையாட்டு, தேசிய கொடி பறக்கவிட்டது என கடலுக்குள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.

    மேலும் கடந்த 16 ஆண்டுகளாக கடல் நீச்சல் பயிற்சியும் அளித்து வருகிறார். இவரது மகள் தாரகை ஆராதனா (வயது 8). இவர் தந்தையிடம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் சிறுமி தாரகை ஆராதனா கோவளத்தில் இருந்து நீலாங்கரை வரை 19 கி.மீ. தூரத்தை கடலில் நீந்தினார். இதனை அவர் 6 மணி நேரம் 14 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார்.

    கடலோர பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்று, இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக அரவிந்த் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×