search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சுய உதவி குழுக்களுக்கான விரிவாக்க நடவடிக்கை குறித்த கருத்தரங்கம்

    சுய உதவி குழுக்களுக்கான விரிவாக்க நடவடிக்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை, வெபெக்ஸைப் பயன்படுத்தி ஆன்லைன்   முறையில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கான   அறிமுகம் என்ற தலைப்பில் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 

    இதில் 60-க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், முதுநிலை மாணவர்கள் மற்றும் 5-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். தலைமை பேச்சாளர் மற்றும் பங்கேற்பாளர்களை எம்.கே.சி.இ.யின்   முதல்வர் ரமேஷ்   பாபு வரவேற்று தலைமை உரையை ஆற்றினார். சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும்  மாணவர் களுக்கு மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் ஒரு தெளிவு பெற இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை  அவர்  எடுத்து ரைத்தார்.  மேலும், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த முதலீட்டு அம்சம்களை பயன்படுத்திக் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்தினர்.

    ஜெயப்பிரகாஷ் மரியா மைக்கேல், செபி, ஸ்மார்ட், என்.எஸ்.இ., என்.ஐ.எஸ். எம்.ன் அங்கீகரிக்கப்பட்ட சென்னை   பயிற்சியாளர், நிகழ்ச்சியின் தலைமை பேச்சாளர், மியூச்சுவல் பண்டுகளில்  முதலீடு செய்வதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகள், ஆன் லைன் மூலம் மியூச்சுவல் பண்டுகளில் எவ்வாறு முதலீடு செய்வது, போன்றவற் றைப்பற்றி விரிவாக விளக்கினார், பங்கேற்பாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தினர்.

    முடிவில் எம்.பி.ஏ. துறை தலைவர் வனிதா, நன்றி கூறினார். மேலும், சுய உத விக்குழு   உறுப்பினர்கள் மற்றும் மேலாண்மைத்துறை மாணவர்களும் இந்த அம்சம்களை தங்கள் வாழ்வில் முறையாகப் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை எம்.பி.ஏ. துறை உதவி பேராசிரியர் ரா.சங்கர் கணேஷ் செய்திருந்தார்.
    Next Story
    ×