search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இயற்கை முறையில் வளர்ந்த “மாப்பிள்ளை சம்பா” நெற்பயிர்கள்.
    X
    இயற்கை முறையில் வளர்ந்த “மாப்பிள்ளை சம்பா” நெற்பயிர்கள்.

    ரசாயனம் இல்லாத இயற்கை முறையில் விளைந்த நெற்பயிர்கள்

    சிவகங்கை அருகே ரசாயனம் இல்லாத இயற்கை முறையில் விளைந்துள்ள நெற்பயிர்களை விவசாயிகள் பார்த்து வியந்து வருகிறார்கள்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே  உள்ள குமாரபட்டி கிராமத் தில் 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ள  மாப்பிள்ளை சம்பா ரக நெற்பயிர்களை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்

    குமாரபட்டி கிராமத்தை சேர்ந்த காளைமாயாண்டி தனது வயலில் ரசாயன உரம் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பாரம் பரிய நெல் ரகமான மாப் பிள்ளை சம்பாவை சாகுபடி செய்துள்ளார். 

    இந்த நெற்பயிர்கள் தற்போது 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளன. நெற்பயிர்கள் நன்றாக தூர் வெடித்துக் காணப்படுவதால் ஒவ்வொரு கதிரிலும் 200-க்கும் அதிக மாக நெல்மணிகள் விளைந்துள்ளன.இதையறிந்த சுற்றுவட் டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நேரில் வந்து பயிர்களை பார்த்து வியந்து, சாகுபடி முறை மற்றும் பராமரிப்பு குறித்து ஆர்வத்துடன் கேட்டுச் செல் கின்றனர். 

    காளைபாண்டிக்கு சொந்தமாக சில ஏக்கர் நிலம் உள்ளது. அவர் கூறுகையில், எல்லா விவசாயிகளை போலவே நானும் ரசாயன உரத்தைப் பயன்படுத்தி குறுகிய கால நெல் ரகங்களைத்தான் சாகுபடி செய்து வந்தேன். சாகுபடி செலவு அதிகம், மகசூல் குறைவு என்றாலும்  உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது  என்று எண்ணி லாப, நஷ்ட கணக்குப் பார்க்காமல் குறுகிய கால நெல் ரகங்களையே சாகுபடி செய்து வந்தேன்.

    கடந்த சில ஆண்டுகளாகவே ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் மாட்டு சாணம் உட்பட இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்வது குறித்த விவரங்களைக் கேட்டு சேகரித்து  வந்தேன்.  முதல் முறையாக இந்த ஆண்டு தான் பாரம்பரிய நெல் சாகு படிக்கு மாறினேன்.

    முதல் முறை என்பதால் மொத்தமுள்ள எல்லா நிலத்திலும் சாகுபடி செய்ய வேண்டாம் என முடிவு செய்து, ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டும் சாகுபடி செய்தேன். நண்பர் ஒருவரிடம் பாரம்பரிய ரகமான  மாப்பிள்ளை சம்பா  விதைநெல் 2 கிலோ வாங்கி அதைக்கொண்டு பாய் நாற்றங்கால் முறையில் விதைத்தேன்.

    பின்னர் நெற்பயிர் களைப் பறித்து வயலில் நடவு செய்தேன். நடவுக்கு முன்பு  வயலில் தண்ணீர்பாய்ச்சி உழவு ஓட்டியதுடன் சரி, வேறு எதுவும் செய்ய வில்லை. அத்துடன் எந்த ரசாயன உரத்தையும் பயன்படுத்தவில்லை.

    தொடக்கத்திலேயே பயிர்கள் நன்கு வளரத் தொடங்கின. அவ்வப்போது மழை பெய்ததால் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையும் மிச்சமானது.

    தற்போது, நட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளன. இன்னும் சில நாட்களுக்குள் அறுவடை செய்துவிடலாம். 

    மாப்பிள்ளை சம்பா நன்கு உயரமாக வளரும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.

    ஒவ்வொரு கதிரிலும் 200-க்கும் மேற்பட்ட நெல் மணிகள் விளைந்துள்ளன. பயிர்கள் நன்கு திடமாக வளர்ந்துள்ளதால் இதன் மூலம் கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கும் நல்ல தீவன மாகும். இனி, என்னு டைய எல்லா வயல்களிலும் மாப்பிள்ளை சம்பா ரகத்தையே சாகுபடி செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.
    Next Story
    ×