search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானி கூட்டுகுடிநீர் திட்டத்தை  காணொளி காட்சி வாயிலாக  தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    X
    பவானி கூட்டுகுடிநீர் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    செயல்பாட்டுக்கு வந்த ஊரக குடியிருப்பு கூட்டு குடிநீர் திட்டம்

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பவானி கூட்டு குடிநீர் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    பல்லடம்

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 155 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூ.99.24 கோடி மதிப்பில் பவானி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் செயல்படுத்த அரசு ஆணை வழங்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தது. 

    இதன்படி பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைப்புதூர், கணபதிபாளையம்,ஆறுமுத்தாம்பாளையம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம், இடுவாய், முதலிபாளையம், உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள 155 கிராம குடியிருப்புகளில்,1.92 லட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 70 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்  சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பவானி கூட்டு குடிநீர் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து பல்லடம் அருகே உள்ள அருள்புரம் தனியார் திருமண மண்டபத்தில்,பவானி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பயன் பெறும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கக் கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது.இதில் கூட்டு குடிநீர் திட்டத்தின் பயன்பாடு குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் வினீத் விளக்கிக் கூறினார்.

    இதனை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரங்கராஜன் இந்தக் கூட்டுக் குடிநீர் திட்ட செயல்பாடுகளை வரைபடத்தின் மூலம் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு விளக்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்ட கவுன்சிலர்கள்  கொங்கு ராஜேந்திரன்,ஜெயந்தி லோகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கரைப்புதூர் ஜெயந்தி கோவிந்தராஜ், கணபதிபாளையம் நாகேஸ்வரி சோமசுந்தரம், ஆறுமுத்தாம்பாளையம் பாரதி சின்னப்பன், வேலம்பாளையம் நடராஜ், மங்கலம் மூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×