search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    திருச்சியில் திருடுபோன 175 ஆடுகள் மீட்பு

    மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி காவல் சரகத்தில் 34 வழக்குகளில் 147 ஆடுகளை தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி மத்திய மண்டலக் காவல்துறைத்தலைவர் வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி சரக காவல்துறைத் துணைத்தலைவர் சரவணசுந்தர் மேற்பார்வையில் கடந்த நவம்பர மாதம் 23 ஆம் தேதி ஆடு திருடும் கும்பலை பிடிக்க உதவி ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்களை உள்ளடக்கிய திருச்சி சரக அளவில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அனைத்து மாவட்டங்களிலும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. 

    இதையடுத்து நவம்பர் 23 முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை திருச்சி சரகத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஆடு திருட்டு சம்பந்தமாக மொத்தம் 34 வழக்குகள் பதியப்பட்டு 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.7.35 லட்சம் மதிப்புள்ள 147 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன.

    இந்த வழக்குகளில் ஆடு திருட பயன்படுத்திய 8 வாகனங்கள் (கார்&3, டாடா ஏசி&2, இருசக்கர வாகனம்&3) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

    மீட்கப்பட்ட ஆடுகள் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு குற்றவாளிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.  

    மேலும் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்க சரக தனிப்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×