என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
முழு ஊரடங்கு-நீலகிரியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது
சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
ஊட்டி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று 3-வது வாரமாக நீலகிரியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலும் இன்று 3&வது வாரமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப் பட்டிருந்தன. கடைவீதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள், சந்தைகள், என பலவும் மூடப்பட்டு வெறிச்சோடியது.
ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி-குன்னூர் சாலைகளும் பொதுபோக்கு வரத்து இல்லாததால் வெறிச் சோடியது. இதேபோல் கூடலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் முழு ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடித் தனர்.
Next Story