என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் பி.வி.பாரதி பேசினார்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் பி.வி.பாரதி பேசினார்.

    சீர்காழியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சீர்காழியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சீர்காழி:


    சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி தலைமை வகித்தார். நகர செயலாளர் வினோத் வரவேற்றார். 

    ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நற்குணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், பேரவை செயலாளர் மணி, பேரூர் செயலாளர் போகர் ரவி, பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், வக்கீல்கள் நெடுஞ்செழியன், தியாகராஜன், பாலாஜி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×