என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  குலசேகரம் அருகே துக்க வீட்டில் தகராறு, 5 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குலசேகரம் அருகே துக்க வீட்டில் நடந்த தகராறு தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  நாகர்கோவில்:

  குலசேகரம் அருகே காந்திநகர் பெருஞ்சாணி பகுதியை சேர்ந்தவர் அணிஷ்குமார்( வயது 26). இவர் அந்த பகுதியில் ஒரு   துஷ்டி வீட்டுக்கு சென்றார் அங்கு  அரசு ரப்பர் கழகத்தில் வேலை பார்க்கும் முருகன் (46) என்பவர் மது போதையில் தகராறு செய்தார்.

   அவரை அணிஷ்  தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த முருகன் கையில் இருந்த மதுபாட்டிலால் அணிசை தாக்கினார். இதில் காயம் அடைந்த அணிஷ் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார்.

   இதற்கிடையே  அணிசின் நண்பர்கள் சேம், ராஜ், சதீஷ் 4 பேர் சேர்ந்து முருகனை தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த  முருகன் நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு  தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலிசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
  Next Story
  ×