என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
.
சேலம் இரும்பாலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை
By
மாலை மலர்22 Jan 2022 9:41 AM GMT (Updated: 22 Jan 2022 9:41 AM GMT)

சேலம் இரும்பாலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை போனது.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் வல்லபராஜ் (வயது 63). இவர் கடந்த டிசம்பர் 24 ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவரின் வீட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சேலத்திற்கு வந்த வல்லபராஜ் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணம், கார் சாவி, சி.சி.டி.வி. காமிரா ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வல்லவராஜ் இரும்பாலை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி மரவனேரி பகுதியை சேர்ந்த ஆடிட்டர் சங்கரராமன் அலுவலகத்திலும் மர்ம நபர்கள கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
இது குறித்து சங்கரராமன் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தடுத்த திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் இரும்பாலை அருகே உள்ள குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் வல்லபராஜ் (வயது 63). இவர் கடந்த டிசம்பர் 24 ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவரின் வீட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சேலத்திற்கு வந்த வல்லபராஜ் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணம், கார் சாவி, சி.சி.டி.வி. காமிரா ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வல்லவராஜ் இரும்பாலை போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து சங்கரராமன் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தடுத்த திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×