என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் போலீசார் கைது செய்தனர்
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அரிசனதெரு பகுதியை சேர்ந்தவர் திருமால் மகன் ராகுல் என்கின்ற ஹரிஹரன் (வயது 23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இவர் 17 வயதான சிறுமி ஒருவரை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகத்தின் பெயரில் அச்சிறுமியின் பெற்றோர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் சிறுமி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராகுல் சிறுமியை கடத்தி சென்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது உறுதியானது. இதையடுத்து சிறுமியின் மாயமான வழக்கு பிரிவை மாற்றி குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் ராகுலை குளித்தலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகுல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story