search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர்க்கும் கூட்டம்
    X
    குறைதீர்க்கும் கூட்டம்

    நீலகிரியில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை

    ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இயற்கை விவசாய குழு கூட்டம் இணையதளம் மூலமாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. 

    இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள், மற்றும் இதர துறையினை சார்ந்த அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். விவசாய சங்கங்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரியதுறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 60 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

    மேலும் தோட்டக்கலைத் துறையின் மூலம் கீழ்க்கண்ட விபரங்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் இயக்குநரகத்தால் வருடந்தோறும் பயிற்சி, கண்டுனர் சுற்றுலா போன்ற அனைத்து இனங்களுக்கும் விவசாயிகளின் விருப்பப்படி தலைப்புகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

    மேலும் புதிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சிகள் தேவைப்படும் பட்சத்தில் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தால் அடுத்த ஆண்டு செயல்திட்டத்தில் அனுமதி பெற்று பயிற்சிகள் வழங்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது.

    தோட்டக்கலைத் துறையின் மூலம் உயர்ரக காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காய்கறி விதை மற்றும் இயற்கை வேளாண் இடு பொருட்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி  பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

    மேலும், மாவட்ட அளவிலான இயற்கை விவசாயம் குழு கூட்டத்தில், விவசாயிகளிடையே மண் பரிசோதனை அடிப்படையில் உரங்கள் இடுவதை அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இயற்கை விவசாயத்திற்கு அடிப்படையாக இருக்கும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை நம் மாவட்டத்தில் அதிகரிக்கவும், மாட்டு தீவன உற்பத்தியினை அரசாங்க நிலங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் இயற்கை விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். 
    Next Story
    ×