search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    காரைக்குடி-திருவாரூர் ரெயில் பயண நேரம் குறைப்பு

    காரைக்குடி-திருவாரூர் ரெயில் பயண நேரம் வருகிற 26-ந் தேதி முதல் குறைகிறது.
    காரைக்குடி 


    மயிலாடுதுறை, திருவா ரூர், காரைக்குடி, பாசஞ்சர் டெமு ரெயிலின் நேரம் வருகிற 26-ந்தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வேதுறை அறிவித்துள்ளது.

    காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வரை 157 கி.மீ.தூரம் அகல   ரெயில்பாதையாக ரூ.674 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு இந்த பாதையில் பாசஞ்சர் ரெயில் விடப்பட்டது. 

    இந்த பாதையில் 74 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. இதில் ஊழியர்கள் இல்லாததால் ரெயிலில் வரும் கேட் கீப்பர் ரெயிலை நிறுத்தி கேட்டை மூடிவிட்டு ரெயில் சென்றபின் மீண்டும் கேட்டை திறந்து விட்டு அதே ரெயிலில் அடுத்த கேட்டை திறக்க பயணம் செய்வார். இதனால் தான் பயணநேரம் அதிகமானது. 

    தற்போது 34 கேட்டுகளில் முன்னாள் ராணுவத்தினர்  நியமிக்கப்பட்டுள்ளனர். சில கேட்டுகள் மூடப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 26-ந் தேதியில் இருந்து காரைக்குடி-திருவாதவூர் ரெயில் பயண நேரம் 4.45 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்தப்பாதையில் 26-ந்தேதி (புதன்கிழமை) முதல் வேகம் அதிகரிப்பதால், சுமார் 5 மணி நேரத்தில் திருவாரூர், மயிலாடுதுறை சென்றடையும், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த ரெயில் (எண் 06197-06198) மயிலாடுதுறையில் காலை 7 மணிக்கும், திருவாருரில் காலை8.15 மணிக்கும் புறப்பட்டு காரைக்குடிக்கு மதியம் 1 மணிக்கு வரும்.மறுமார்க்கமாக காரைக்குடியில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 7.45-க்கும், மயிலாடு துறைக்கு இரவு 9 மணிக்கும் போய்சேரும்.
    Next Story
    ×