என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையினரை படத்தில் காணலாம்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையினரை படத்தில் காணலாம்.

    ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருச்சி:

    திருச்சி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சோழன், மோகன்ராஜ், ரவி, அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தில் கடந்த பொங்கல் தினத்தன்று எங்கள் சமுதாயத்தைச்சேர்ந்த பெண் ஒருவர் இறந்துவிட்டார். 

    அவரை அடக்கம் செய்வதற்காக பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முயன்றபோது, குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி தகராறு செய்து உள்ளார்கள். 

    இந்த சம்பவத்தை கண்டித்து இன்று கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். மேலும் எங்கள் இனமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். 

    திருவண்ணாமலை மாவட்டம் கீரனூர் கிராமத்தில் இழந்த பெண்ணை அடக்கம் செய்ய விடாமல் எங்கள் சமுதாய மக்களை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்    இல்லையென்றால் நாங்கள் இதுபோன்ற பல்வேறு போராட்டங்களை நடத்துவோம். 
    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    இந்த போராட்டத்தின் போது சுமார் 50&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
    Next Story
    ×