search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலந்தாய்வு கூட்டம்
    X
    கலந்தாய்வு கூட்டம்

    நீலகிரியில் பழங்குடியின மக்களின் தேவைகள் குறித்து பட்டியல் தயாரிப்பு

    பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பது பற்றி கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சிறப்பு மலைப்பகுதி மேம்பாடு திட்ட கூட்டரங்கில்  பண்டைய பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், செடிகல் பழங்குடியினர் கிராமத்தில் நேரடியாக பழங்குடியின மக்களை பார்வையிட்டு கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு, நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    மேலும், ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பட்டியல் தயாரிக்கவும், வட்ட அளவில் பட்டியல் தயாரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

     கோட்ட அளவில் அந்த பட்டியல் சரிபார்க்கப்பட்டு பின்னர் மாவட்ட அளவில் அந்த பட்டியலை குழு மூலம் சரிபார்க்கப்பட்டு, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்படும். அரசின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் தேவையான அடிப்படை வசதிகள் மேலும் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். 

    பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து பழங்குடியின மக்களுக்கு அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

     கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்  சுகந்தி பரிமளம், பழங்குடியின ஆராய்ச்சி மைய இயக்குநர் உதயகுமார், பழங்குடியின சமுதாயத்தை சார்ந்தவர்கள்  சத்தியராஜா,  சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×