என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
அரசு பெண் அதிகாரிக்கு செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல்
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் அரசு பெண் அதிகாரிக்கு செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் தாசில்தார் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வருபவர் நசீபா.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகர் என்பவர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது தான் ஆசாத் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் என்று தெரிவித்தார். மேலும் தனது கட்சிக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது பெண் அலுவலர் நசீபா, பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர், நசீபாவின் செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story